இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. மக்கள் கோவின் இணையதளத்தின் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் மோகன் ராம்(50) என்ற மருத்துவ பணியாளர் ரூபாய் 50 பெற்று Allergy, Gas Trouble ஊசிகளைப் தடுப்பூசிகள் என்று கூறி மக்களுக்கு செலுத்தியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் வெளியில் தெரிய வர மோகன்ராம் கைது செய்யப்பட்டுள்ளார்.