Categories
மாநில செய்திகள்

உஷார்..! இதை செய்தல் குற்றவியல் நடவடிக்கை பாயும்….. அதிரடி எச்சரிக்கை…!!!!

சென்னையில் தெரு, சாலை, பெயர்ப்பலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி சார்பாக சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்க சிங்காரச் சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டு அந்த இடங்கள் தமிழகத்தில் கலாச்சாரத்தையும் வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் விதமாக வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுவரொட்டி ஓட்டுபவர் மீது காவல்துறையில் புகார் தெரிவித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மார்ச் 18 வரை பொது இடங்களில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டியவர்களிடம் 24.63 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |