Categories
தேசிய செய்திகள்

உஷார்…. உங்க ரேஷன் கார்டுக்கு பெரிய ஆபத்து…. அரசு திடீர் அதிரடி நடவடிக்கை….!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு இலவசமாக மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவது தொடர்பாக ராஜ்யசபா எம்பி சுசில் குமார் மோடியின் கேள்விக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி பதில் அளித்துள்ளார். அதில் கடந்த ஐந்து வருடங்களில் ஏராளமான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

நாடு முழுவதும் கடந்த ஐந்து வருடங்களில் 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் தகுதியற்ற மற்றும் போலி என மொத்தம் 2 கோடியே 41 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பீகார் மாநிலத்தில் மட்டும் 7 லட்சத்து 10 ஆயிரம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உத்திரபிரதேசத்தில் 1.42 கோடி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 23.03 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது காடுகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலானது. தகுதி இல்லாத நபர்கள் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டது. இருந்தாலும் நம் மாநில முதல்வர் அப்படி எந்த விதியையும் உருவாக்கவில்லை என்று கூறினார். தற்போது ரேஷன் கார்டுகளை ரத்து செய்யும் திட்டம் உத்தரப்பிரதேசம் அரசால் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டு பட்டேலில் இருந்து நீக்கப்பட்டு ஏழைகளுக்கு மட்டுமே இலவச ரேஷன் பலன் கிடைக்கும். மேலும் இந்த செயல்முறை முடியும் வரை புதிய ரேஷன் கார்டுகள் உருவாக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

Categories

Tech |