11 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் பாதிப்பு உள்ளது என சந்தேகிப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு,தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோயை தடுக்கும் பொருட்டு விமான நிலையங்கள், துறைமுகங்களிள் வரும் பயணிகளை கண்காணிக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து நோய் பாதிப்புடன் வரும் பயணிகளை தனிமைப்படுத்தவும், மாதிரிகளை சேகரித்து புனேயில் உள்ள தேசிய நோய்க்கிருமிகள் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பவும் அறிவுறுத்தியுள்ளது.