Categories
தேசிய செய்திகள்

உஷார்…! செல்போன் பேட்டரி வெடித்து….. 8 மாத குழந்தை பலி….. பெரும் அதிர்ச்சி….!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில் குமார் காஷ்யப் கூலி தொழிலாளி இவருக்கு 8 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் சுனில் தன்னுடைய குடும்பத்தோடு மின் இணைப்பு இல்லாத வீட்டில் வாழ்ந்து வந்ததால் சூரிய ஒளி தகடை பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் வழக்கம் போல சுனில் தன்னுடைய செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு ஃபோனை வைத்துள்ளார். 6 மாதத்திற்கு முன்னதாக வாங்கியதாக கூறப்படும் இந்த போன் பேட்டரி வீங்கிய நிலையில் இருந்துள்ளது.

இதனையடுத்து சார்ஜ் போட்ட நிலையில் போன் வெடித்து சிதறியது. இதில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த எட்டு மாத குழந்தை மீது மின்சாரம் பாய்ந்ததில் குழந்தை மயக்கம் அடைந்துள்ளது. இதனை கண்டு பெற்றோர்கள் உடனே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. செல்போன் பேட்டரி வெடித்து எட்டு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |