Categories
தேசிய செய்திகள்

உஷார்! பரிகாரம் செய்தால் 35 வயது பெண்…. மேட்ரிமோனியில் பதிவு செய்த நபரை…. ஏமாற்றிய போலி ஜோதிடர்…!!

திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்தவரிடமிருந்து மர்ம நபர்கள் ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 52). இவர் தொழிலாளர் துறையில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு மேட்ரிமோனியில் தனது பெயர், தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த இரண்டு வாரங்கள் கழித்து அவரது தொலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

அந்த அழைப்பில் ஜோதிடர் என்று பேசி அறிமுகமான அந்த நபர்மதன்குமாரிடம் திருமண தோஷங்கள் உள்ளதாகவும் பரிகாரம் செய்தால் தோஷங்கள் கழிந்து உங்களுக்கு 35 வயது பெண்ணுடன் திருமணம் நடக்கும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய மதன்குமார் பரிகாரம் செய்வதற்காக ஜோதிடரின் வங்கிக் கணக்கிற்கு அவர் கேட்கும்போதெல்லாம் பணத்தை அனுப்பியுள்ளார்.

இதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 97 லட்சம் வரை அந்த நபர்களிடம் இழந்துள்ளார். இதனையடுத்து ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மதன்குமார் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |