இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் சுற்றுச்சூழல் அதிகமாக மாசடைந்து வருகிறது. வாகனங்களின் பயன்பா,டு பிளாஸ்டிக் பொருட்களை எரித்தல், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஆகியவற்றால் சுற்றுச்சூழல் அதிகமாக மாசடைந்து வருகிறது. இந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக ஆண்களின் ஆணுறுப்பின் அளவு கடந்த சில ஆண்டுகளாகவே சுருங்கி வருவதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர் என்பவர் ஷன்னா ஸ்வான் அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.
மேலும் இதன் காரணமாக சிறிய ஆணுறுப்புகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஆண்களின் ஆணுறுப்பு மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சிறு வயதிலேயே இது தொடங்குவதாகவும் தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படும் தாலேட் எனும் ரசாயனம் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது ஆணுறுப்பின் அளவு விந்தணுக்களின் எண்ணிக்கையை கடுமையாகப் பாதிப்பதால் மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.