Categories
மாநில செய்திகள்

உஷார்!…. பெண்களை தவறாக சித்தரிப்பவர்ளுக்கு…. சசிகலா புஷ்பா கடும் எச்சரிக்கை…..!!!!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும் முன்னாள் எம்பியும் ஆன சசிகலா புஷ்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பா பேசியதாவது “நாடாளுமன்ற எம்பிகளுக்கு வீடு அளித்தது தொடர்பாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது என அவர் கூறினார்.  நாடாளுமன்ற எம்பியாக இருந்து அவர்களுடைய பதவிக்காலம் முடிந்தபின் முன்னாள் எம்பிகளுக்கு கோட்டா என ஒன்று இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு முன்னாள் எம்பி-களுக்கும் 3 மாதத்திற்கு ஒரு முறை புதுப்பித்து அந்த வீட்டில் இருக்கக்கூடிய வாய்ப்பை மத்திய அரசாங்கம் கொடுத்து இருக்கிறது.

நான் மட்டுமின்றி அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்பி-க்களும் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். காரணம் இருந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் அதற்குரிய சரியான காரணம் எனக்கு இருந்தது என்கிற அடிப்படையில், 3 மாதத்திற்கு ஒருமுறை அந்த வீடு புதுப்பிக்கப்பட்டது என சசிகலா புஷ்பா குறிப்பிட்டார். அதன்பின் சமூகவலைதளத்தில் பெண்களை தவறாக, ஆபாசமாக சித்தரிப்பவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டஈடு கொடுக்கவேண்டி இருக்கும். மேலும் வழக்கையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று பா.ஜ,க மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |