தமிழகத்தில் சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் இடி, மின்னலுடன் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை, கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் சூறாவளி, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
எனவே கால்நடைகளை மின்கம்பத்தில் கட்ட வேண்டாம் எனவும் எந்நேரத்திலும் மின்தடை ஏற்படும் என்பதால் மெழுகுவர்த்தி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருவதால், டிவி மற்றும் செல்போன் ஆகியவற்றை உபயோகப்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.