Categories
தேசிய செய்திகள்

உஷார்…! மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும்…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காளவிரிகுடா கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாக மாறும். எனவே 2 முதல் 5 ஆம் தேதி வரை மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |