இன்றைய காலகட்டத்தில் காலத்திற்கு ஏற்றாற்போல உணவு பழக்கங்களும் மாறிவருவது. முன்பெல்லாம் நம்முடைய முன்னோர்கள் இயற்கையான உணவை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர் என்று நமது தெரிந்த ஒன்றே. ஆனால் தற்போது நாம் துரித உணவுகளுக்கு மாறி வருகிறோம். துரித உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும் என்பதை தெரிந்தும் நாம் அதை விரும்பி சாப்பிட்டு வருகிறோம். மதிய வேளைகளில் எப்பொழுதுமே துரித உணவுகளை தவிர்த்து நம்முடைய வழக்கப்படி பாரம்பரிய உணவான அரிசி சாதம் தான் சாப்பிட வேண்டும். அதுதான் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
அவ்வாறு சாப்பிடாமல் துரித உணவுகளை சாப்பிட்டு வருவதால் செரிமான கோளாறு, உடல் நிலையில் மாற்றம் ,மயக்கம் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜூஸ், சூப், நூடுல்ஸ், பாஸ்தா, பர்கர், சாண்ட்விச், சாலட், கொழுப்பு உணவுகள் போன்ற துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவை நம்முடைய உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன.