Categories
பல்சுவை

உஷார்..!! ஹோட்டலில் தங்க போறீங்களா….? பெண்களே இத கவனிங்க….!!!!

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விகுறியாகவே உள்ளது. ஏனென்றால் பெண்கள் தங்கும் இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படுகிறது. அதனை அறியாத பெண்கள் பலரும் சிக்கலில் மாட்டி கொள்கின்றனர். எப்போதும் ஹோட்டல் அறைக்கு செல்லும்போது பெண்கள் கவனமாக இருப்பது அவசியம். பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கேமரா தயாரித்து அதனை சிலர் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பொருத்தப்படும் ரகசிய கேமராக்களை எப்படி கண்டுபிடிக்கலாம் ? என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

* ஒருவேளை நீங்கள் ஹோட்டல் அறையில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அங்கு ஏதாவது வித்தியாசமான பொருள்கள் இருக்கிறதா ? என்பதை கவனிக்க வேண்டும். ரகசிய கேமராக்களை சுவரின் ஒரு மூலை, கதவுகள், மின் விளக்கு, அறையின் மேற்கூரை, சுவர் கடிகாரம், பூக்குவளை, கண்ணாடி, புகைப்பட ஃப்ரேம்கள், டிஷ்யூ பெட்டிகள், பூச்செண்டு இவை இருக்கும் எந்த இடங்களிலும் பொருத்த முடியும்.

* முதலில் உங்கள் அறையில் உள்ள லைட்டுகளை ஆஃப் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான ரகசிய கேமராக்களில் சிறிய எல்இடி பொருத்தப்பட்டிருக்கும். இதனை இருளில் எளிதாக கண்டறிய முடியும்.

* அடுத்ததாக யாருக்காவது உங்களுடைய செல்போனிலிருந்து கால் செய்து பேசிக்கொண்டே நீங்கள் தங்கும் அறையை சுற்றி வர வேண்டும். ஏனென்றால் பொதுவாக சர்வைலன்ஸ் கேமராக்கள் அருகில் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தால் அது ஒரு விதமான சத்தத்தை வெளிப்படுத்தும்.

* உங்களுடைய அறையில் உள்ள லைட்டுகளை ஆஃப் செய்துவிட்டு மொபைலில் உள்ள ஃப்ளாஷ் லைட்டை அறையில் சுற்றி அடிக்கும் போது ஏதாவது ரெஃப்லக்ஷன் ஏற்பட்டால் அந்த இடத்தில் ரகசிய கேமரா இருக்க வாய்ப்புள்ளது.

* இறுதியாக பாத்ரூம் கண்ணாடியில் உங்கள் கைகளை வைத்து பாருங்கள். அப்போது உங்களுடைய கைகளுக்கும் ரெஃப்லக்ஷனுக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அங்கு கேமராக்கள் ஏதாவது இருக்க வாய்ப்புள்ளது.

Categories

Tech |