Categories
சென்னை மாநில செய்திகள்

உஷார்…. LUDO மூலம் ஏற்பட்ட பழக்கம்…. 10-ம் ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…..!!!!

10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு சென்னையை சேர்ந்த டிப்ளமோ முடித்த விக்னேஷ் என்ற நபருடன் LUDO ஆன்லைன் விளையாட்டு மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் செல்போனில் பேசி வந்த இருவருக்கும் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் ஆபாச உரையாடலாக மாறியது. இந்த உரையாடலை வைத்து சிறுமியை மிரட்டி நிர்வாணமாக வீடியோ காலில் விக்னேஷ் பேச வலியுறுத்தியுள்ளார். சிறுமி அவ்வாறு செய்த நிலையில் அதையும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.

அதன் பிறகு சிறுமி தனியாக இருக்கும்போது வீட்டிற்கு சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் மொபைல் எண்ணை அவரது பெற்றோர் எடுத்து பார்த்த போது அதில் விக்னேஷ் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக பெற்றோர் விசாரிக்கும் போது சிறுமி நடந்ததை கூறியுள்ளார்.

அதன் பிறகு சிறுமியின் பெற்றோர் விக்னேசை தொடர்பு கொண்டு பேசிய போது சிறுமியின் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் ஒரு வீடியோவிற்கு 25,000 ரூபாய் வீதம் 50 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என கூறியுள்ளார். அவ்வாறு பணம் தராவிட்டால் சிறுமியின் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்தனர். அதன் பிறகு அந்த நபரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் ஆன்லைன் விளையாட்டு மூலம் தெரியாத ஒரு நபரை நம்பி பத்தாம் வகுப்பு மாணவி இப்படி ஒரு துயரத்திற்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |