Categories
உலக செய்திகள்

உஸ்பெகிஸ்தானில் இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு… பிரதமர் மோடி பங்கேற்பு…!!!!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜினிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற எட்டு நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறது. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019 ஆம் வருடம் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அதன் பிறகு உறுப்பு நாடுகள் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்த சூழலில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமகன் நகரில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகின்றது.

மேலும் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த மாநாட்டை முன்னிட்டு சமற்கண்ட் நகரின் முக்கிய இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. உறுப்பு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை போன்றவற்றை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. மேலும் உஸ்பெக்கிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கின்றார். மேலும் பார்வையாளர் நாடுகள் உட்பட 14 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றார்கள். மாநாட்டின் இடையே பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது

Categories

Tech |