Categories
தேசிய செய்திகள்

உ.பியில் வன்முறை… தடுப்புக்காவலில் பிரியங்கா காந்தி…. விளக்குமாரால் சுத்தம் செய்யும் வீடியோ இதோ!!

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அறையை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சுத்தம் செய்வது போன்ற காட்சி வெளியாகியுள்ளது..

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதிக்கு இறந்துபோன விவசாயிகள் குடும்பங்களை சேர்ந்த நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அங்குள்ள நிலைமையை கண்டறிவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்க காந்தி செல்வதற்கு முற்பட்ட போது, உத்தரபிரதேச காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.. தற்போது அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கூடிய சூழலில், அவர் தங்கியிருக்கக் கூடிய அறையை விளக்குமாரால் சுத்தம் செய்து இருக்கிறார்..

மேலும் அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் உத்தரபிரதேச காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.. இன்றைய தினம் முழுவதுமாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள்.. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் இந்த காணொளி காட்சியை சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.. அதே போல உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்..

பிரியங்கா காந்தி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரண்டிங்கில் இருக்கிறார்.
முன்னதாக உத்தரபிரதேச காவல்துறையிடம் என்னை ஏன் தடுக்கிறீர்கள்.. நான் அவர்களை சந்திக்க கூடாதா? என்று காரசாரமாக விவாதித்த நிலையில், அந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வந்தது.. இந்த நிலையில் 2ஆவது வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தொடர்ந்து அவரை தடுப்புக்காவலில் சட்டவிரோதமாக வைத்திருப்பதாகவும், நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக நாங்கள் முறையிடப் போவதாகவும் பிரியங்கா காந்தியின் வழக்கறிஞர் கூறிய நிலையில் அவரும் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்..

இதற்கிடையே குற்றச்சாட்டுக்கு மத்திய இணையமைச்சர் அமைச்சர் அஜய் மிஷ்ரா தரப்பு மறுத்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச அரசு உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |