மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்வினை மத்திய அரசு விடுவித்துள்ளது. இரண்டு தவணைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.1,16,665 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்திரபிரதேசத்திற்கு ரூ.20,928 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பீகாரருக்கு ரூ.11,734 கோடியும் மத்திய பிரதேசத்திற்கு 9 ஆயிரத்து 158 கோடியும், மேற்கு வங்கத்திற்கு 8,776 கோடியும் வழங்கப்பட்டுள்ளது . ஆனால் தமிழகத்திற்கு 4,758 கோடி மட்டுமே பகிரப்பட்டுள்ளது.
வழக்கமாக மாதாந்திர வரிப் பகிர்வாக ரூ.58,332.86 கோடி மட்டுமே விடுவிக்க படும் நிலையில் இந்த மாதம் கூடுதலாக ஒரு தவணையும் விடுவித்தது மத்திய அரசு. மாநிலங்களின் முதலீட்டு மற்றும் வளர்ச்சி செலவினங்களை துரிதப்படுத்த மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்தும் மத்திய அரசின் உறுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது