ஹத்ராஸ் சென்று கொண்டிருந்த பத்திரிக்கையாளரை காவல்துறையினர் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த மாநிலத்தின் காவல்துறையினர் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவில்லை என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு ஹத்ராஸ்க்கு புறப்பட்டுள்ளார்.
ஆனால் செல்லும் வழியில் உத்தரப்பிரதேச காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். அதோடு அவர்கள் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் அதாவது உபா 17ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இது பயங்கரவாத செயலுக்காக நிதி திரட்டுதல் என்ற அம்சத்தை உடையது குறிப்பிடத்தக்கது. சித்திக் கப்பன் என்கிற பத்திரிக்கையாளர் தான் ஹத்ராஸ் செல்லும் வழியில் உத்தரபிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் கேரளா யூனியனின் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கான டெல்லி பிரிவின் செயலாளராகவும் கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல இணையதள பத்திரிகையாளராகவும் இருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் சந்தேகத்தின் அடிப்படையில் சிலர் ஹத்ராஸ்க்கு டெல்லியிலிருந்து வந்துகொண்டிருந்தன என்ற தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது.
அதன் அடிப்படையில்தான் சித்திக் கப்பன், மசூத் அகமத், ரகுமான் மற்றும் ஆலம் ஆகியோர் மதுராவில் வைத்து கைது செய்யப்பட்டனர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது பிஎஃப்ஐ மற்றும் அதற்கு இணையான சிஎஃப்ஐ போன்றவற்றுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதை கைது செய்யப்பட்டவர்களை தெரிவித்ததாக காவல்துறை கூறியுள்ளது. அதோடு அவர்களது கையில் நான் இந்தியாவின் மகள் அல்ல என்ற துண்டுப் பிரசுரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.