Categories
தேசிய செய்திகள்

உ.பி முதல்வருக்கு எதிராக சிறுவன் செய்த காரியம்…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு மாதத்துக்கு முன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக 15 வயது சிறுவன் ஒருவன் ஆட்சேபனைக்குரி பதிவையும், முதல்வரின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சஹாஸ்வான் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து சிறுவனுக்கு எதிரான இவ்வழக்கு மொராதாபாத்திலுள்ள சிறார் நீதி வாரியத் (ஜேஜபி) தலைவர் அஞ்சல் அதானா, உறுப்பினர்கள் பிரமிளா குப்தா, அரவிந்த் குமார் குப்தா போன்றோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் சிறுவன் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டு, அவருக்கு நூதன தண்டனை வழங்கி உத்தரவிடபட்டது. இது பற்றி அரசு கூடுதல் வழக்கறிஞர் அதுல் சிங் ஊடகங்களிடம், ‘குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் செய்தியுடன் முதல்வரின் மார்பிங் படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனால் இதுகுறித்து இந்த மாத தொடக்கத்தில் சிறுவனுக்கு எதிராக ஐ.பி.சி-ன் பிரிவு 505 (public mischief) மற்றும் ஐ.டி சட்டத்தின் பிரிவு 67 உடன் சேர்த்து வழக்குபதியப்பட்டது. இதன் காரணமாக அவர் சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

எனினும் வயதைக் கருத்தில் கொண்டு இது அவரின் முதல் குற்றம் என கருதி ஜே.ஜே.பி உறுப்பினர்கள் 15 வயது சிறுவன் பசுக்கள் காப்பகத்தில் 15 நாள்கள் சமூகசேவை செய்ய வேண்டும். மேலும் 15 நாள்களுக்கு பொதுயிடத்தை சுத்தம் செய்ய வேண்டும். அத்துடன் ஐ.டி சட்டத்தின் கீழ் 10,000 ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டு இருக்கின்றனர்”என்று கூறினார்..

Categories

Tech |