உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் வசீர் கஞ்ச் என்ற கிராமத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது. அதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிலிண்டர் திடீரென வெடித்ததற்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் சிலிண்டர் பயன்படுத்தும் போது சற்று கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.