Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் பயங்கரம்….!! மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…..!!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய  விபத்தில் 4  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட் பகுதியில் பிரீதம்  ராம்-ஈஸ்வரி தேவி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நந்தினி, ரூபி என்ற  2  மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பிரீதம்  ராம் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிலிபிட் -பிசல்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென  கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில்  படுகாயம் அடைந்த 4  பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |