உத்திரப்பிரதேசத்தில் 4 வயது குழந்தையை உறவினர்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவு அதிகரித்து வருகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதற்குப் பின்னரும் பல்வேறு பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஹத்ராஸ் மாவட்டத்திலுள்ள சாதி என்னும் பகுதியில் 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையின் உறவினரே அந்த கொடூரமான செயலை செய்துள்ளனர்.அந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.