Categories
அரசியல்

ஊக்க மருந்து விவகாரம்….. தனலட்சுமியை தொடர்ந்து ஐஸ்வர்யா பாபுவும் நீக்கம்…. பெரும் அதிர்ச்சி…..!!!!

காமன் வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இருந்த தடகள வீராங்கனையான தனலட்சுமி ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டதால் அவர் காமன்வெல்த் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து மற்றொரு வீராங்கனையான ஐஸ்வர்யா பாபுவும் தற்போது நீக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் 2022 போட்டி வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதில் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் 4 * 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ளவிருந்த தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து எடுத்துக்கொண்டது பரிசோதனையில் தெரிய வந்ததால் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

அதேபோல கர்நாடகவை சேர்ந்த ஐஸ்வர்யா பாபு என்ற டிரிபிள் ஜம்ப் வீராங்கனையும் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவரும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐஸ்வர்யா பாபு டிரிபிள் ஜம்ப்பில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |