Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஊசி குத்தியது போல வலி…. பூச்சி கடித்ததாக நினைத்து…. உயிரே போன பரிதாபம்….!!!!

ஈரோடு மாவட்டம் பஞ்சலிங்கபுரத்தைச் சேர்ந்த ரகுநாதன் மனைவி திவ்யபாரதிக்கு வீட்டில் தண்ணீர் பிடிக்க குழாயை திறக்க சென்ற போது ஏதோ ஊசி குத்தியது போல் வலி ஏற்பட்டுள்ளது. ஏதேனும் பூச்சி கடித்திருக்கலாம் என நினைத்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

ஆனால் அறிகுறிகளை பார்த்த மருத்துவர் பாம்பு கடித்து இருக்கலாம் என கூறியதால் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையே வீட்டில் திவ்யபாரதியை கடித்த பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. பாம்பு பிடி வீரர் யுவராஜ் பாம்பை லாவகமாக பிடித்தார்.இதற்கிடையே திவ்யபாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Categories

Tech |