புதுச்சேரி மாநிலம் சுப்பையா நகரை சேர்ந்தவர் சங்கர்லால் (42). இவர், புதிய பேருந்து நிலையம் அருகே பேன்சி ஸ்டோர் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கடையில் நரிக்குறவ பெண்கள் ஊசி, பாசி, மணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக வாங்கி பேருந்து நிலையம் மற்றும் கடற்கரை சாலை பகுதியில் விற்பது வழக்கமாக உள்ளது.
அதுபோல் கணவரை இழந்த நரிக்குறவ பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன், சங்கர்லால் கடைக்கு சென்று ஊசி, பாசி, மணிகள் வாங்கி வந்துள்ளார். இதையடுத்து ஒரு முறை தன் மகளை அனுப்பி, சங்கர்லால் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது அந்த சிறுமியிடம் சங்கர்லால் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அதன் பின் இதுபற்றி அந்த சிறுமி தன் தாயிடம் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து இதுகுறித்து அந்த பெண் உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சங்கர்லால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.