தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூரில் பூவாடைக்காரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி விழா தொடங்கிய நாள் முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றுள்ளது. விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் இருந்தவாறு அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார சேவையும், பூஜைகளும் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Categories