ஊடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூலை 19-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனையின் போது, கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீடிப்பது உள்ளிட்ட கூடுதல் தளர்வுகளை அளிப்பது ஆகியவைக் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, விரைவில் கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.