ஊட்டியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சொன்ன நிலையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணி தொடங்கி 2 மணி வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, கூட்ஷெட் சாலை ஆகிய இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்த நிலையில் மழை பெய்ததால் ஊட்டி குன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.