கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. இங்குள்ள ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுகிறது.
இந்நிலையில் ஊட்டியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது.