Categories
மாநில செய்திகள்

“ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில்”….. இயக்கப்படும் நாட்கள், கட்டண விவரம் இதோ…..!!!!

மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோடை வெயில் உச்சம் தொட்டு வரும் நிலையில் வெப்பத்தை தணிப்பதற்கு மலை பிரதேசங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஊட்டி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து சிறப்பு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நீலகிரி மலை ரயில் தனது சேவையை வழங்கி வருகின்றது. மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மலைப்பகுதிகள் வழியாக பயணித்து இயற்கை காட்சிகளை ரசித்தவண்ணம் நம்மை ஊட்டிக்கு அழைத்து செல்லும். இந்த மலை ரயில் யுனெஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மே 21ம் தேதி இன்று முதல் ஜூலை 16ஆம் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில் 02:25 மணிக்கு ஊட்டிக்கு செல்கிறது. இதற்கான கட்டணமாக மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை முதல் வகுப்பில் 445 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்பு 190 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை முதல் வகுப்பில் 445 ரூபாய் ஆகவும், இரண்டாம் வகுப்பில் 190 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  குன்னூர் முதல் ஊட்டி வரை முதல் வகுப்பில் 350 ரூபாயும், இரண்டாம் வகுப்பில் 150 ரூபாயும், ஊட்டி முதல் கேத்தி வரை முதல் வகுப்பில் முதல் வகுப்பில் 260 ரூபாயும், இரண்டாம் வகுப்பில் 85 ரூபாயும் வசூல் செய்யப்பட்டு வருகின்றது.

Categories

Tech |