நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவுடைய அரசைப் பொறுத்தவரை ஒரு சமூக நீதிக்கான அரசு. திமுக ஆட்சியை பொறுத்தவரை கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள். அதிமுக அரசின் நிதிநிலை கட்டுக்கோப்புக்குள் வைக்கப்பட்டு, கடன் வாங்கினாலும், அது மூலதன செலவுக்கும், ஒரு ஆக்கப்பூர்வமான செலவுக்கும் பயன்படுத்தும்.
இது சமூக நீதிக்கான அரசாக இருப்பதால், இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் சமூகநீதிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. ஆதிதிராவிட மக்கள், பழங்குடியினர்கள், பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கியவர்கள், சீர் மரபினர் கள், நெசவாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் இப்படி பல தரப்பட்ட மக்களுடைய சமூக, கல்வி, பொருளாதாரத்திற்கு எந்த ஒரு அரசை காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நிதிநிலை அறிக்கையிலே அதிகமான அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பல திட்டங்களை கொண்டு வருகிறது .
இது சமூக நீதிக்கான அரசு என்கின்ற வகையில் தான் 86,000 கோடி ரூபாய்க்கு மேல் திட்டங்கள் வகுக்கப்படுகின்றது. ஒவ்வொரு தாலுகாக்களிலும் ஆதரவற்ற விதவைகள், முதியோர் ஓய்வு தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, நேரடியாக பயன்படுகின்ற வகையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூலமாக அரசனுடைய நிதி ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் வந்து அவர்களை கைதூக்கி விட மாதம் மாதம் பணம் கொடுத்து வருகின்றோம் என அமைச்சர் தெரிவித்தார்.