Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊதியம் வழங்கப்படவில்லை… ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் … சிவகங்கையில் பரபரப்பு …!!

300-க்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தம் அடிப்படையில் 700- க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள்  வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக ஊதியம் மற்றும் அரசு அளித்த ஊக்கத்தொகை  வழங்கவில்லை என ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கல்லூரி நிர்வாகத்தின் மருத்துவ அலுவலர் முகமதுரபீக்  பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் சுமார் ஒரு மணி நேரம்  பணி பாதிக்கப்பட்டது.

Categories

Tech |