மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பவர்ஹவுஸ் சாலையில் மின்வாரிய பொறியாளர் மேற்பார்வை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக மின்வாரிய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும், ஐடிஐ பணியாளர்களுக்கு ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு மாநிலத் துணைச் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கியுள்ளார். இந்த போராட்டத்தில் மண்டல செயலாளர் பெரியசாமி, மாநில செயலாளர் ரவிச்சந்திரன், துணைப் பொதுச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.