Categories
உலக செய்திகள்

ஊதிய பிரச்சனை காரணமாக…. விமான நிலைய ஊழியர்கள் திடீர் போராட்டம்…. கவலையில் பொதுமக்கள்….!!!

விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பிய கண்டங்கள் கொரோனா தொற்று காரணமாக பணவீக்கம், ஊழியர் பற்றாக்குறை, ஊதிய குறைவு, வெகுஜன வேலை நிறுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பிரித்தானியாவிற்கு விடுமுறைக்காக செல்பவர்கள் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பயணிகளின் பொருட்கள் காணாமல் போவதோடு பல பயணிகள் தங்களுடைய பயணங்களை ரத்து செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஊதிய பிரச்சனை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது கொரோனா தொற்று காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு 10% ஊழியத்தை குறைத்ததால் 700 தொழிலாளர்கள் வேலையை விட்டு நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை பிரித்தானியாவில் மட்டுமின்றி, அயர்லாந்து, ரூமேனியா, ஸ்காண்டிநோவியா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் உள்ளது.

இதன் காரணமாக ஐரோப்பிய கண்டங்களில் உள்ள ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதோடு, போராட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து ஸ்பெயின் நாட்டில் உள்ள ஈசி ஜெட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஜூலை 1-3, 15-17, 29-31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஏராளமான பிரிட்டிஷ் பயணிகள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கோடை விடுமுறை தினத்தை முன்னிட்டு விமான நிலையத்தின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது கோடை விடுமுறை சுற்றுலாவை பாதிக்கும் என்பதால் மக்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.

Categories

Tech |