டுவிட்டர் ஊழியர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் வெளியேறுங்கள் என்ற எலன் மஸ்க்கின் உத்தரவை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அலுவலகங்கள் நவம்பர் 21 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி மஸ்க் இம்சை தாங்கமுடியாமல் தாங்களாகவே ட்விட்டரிலிருந்து ஊழியர்கள் வெளியேறி வருகிறார்கள்.
இப்படியே எல்லாரும் ட்விட்டரிலிருந்து வெளியேறினால் மூடுவிழா நடத்த வேண்டியதுதான் என ட்விட்டருக்கு RIP பதிவுகள் ட்ரெண்டிங் ஆனது. ஜோதியில் தானும் ஐக்கியமான மஸ்க், தன் பங்குக்கு ட்விட்டருக்கு RIP meme போட்டிருக்கிறார். லட்சம் கோடிகளை கொட்டி வாங்கிய ட்விட்டரை வைத்து மஸ்க் விளையாடி வருகிறார்.