ஊத்துக்கோட்டை அருகே மேம்பாலம் அமைக்கும் பணி ஆனது வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டியில் தண்ணீர் திறக்கும் போதெல்லாம் ஒதப்பையில் இருக்கும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருக்கும் தரைப்பாலம் மூழ்கிவிடும். இந்த சமயத்தில் அவ்வழியாக செல்லும் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது. இந்த தருணத்தில் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்கின்றார்கள்.
இதனால் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க 11 கோடியே 30 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இந்த பணியானது சென்ற 2019 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இடையில் இப்பணிகள் நடைபெறவில்லை. தற்பொழுது சென்ற மார்ச் மாதம் மீண்டும் பணிகள் தொடங்கியது. வரும் மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.