துருக்கியில் மாற்றுத்திறனாளிகளை கடத்திச்சென்று கடுமையாக தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துருக்கி நாட்டில் மர்ம நபர் ஒருவர் மாற்றுத் திறனாளிகளை கடத்தி கடுமையாக தாக்கியதுடன் அவற்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்துள்ளார். இந்த நபருக்கு எதிராக மக்கள் இணையதளங்களில் எதிர்ப்பு தெரிவித்த பின்பே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நபரின் பெயர் Frat Kaiya. இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்தபோது, மாற்றுத்திறனாளிகளை கடுமையாக தாக்குவது தொடர்பான புகைப்படங்கள் மட்டும்தான் பதிவேற்றப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்களில் Engin Elakci (33) என்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் அவரை Frat தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Engin கூறியுள்ளதாவது, கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதியன்று Frat வேலை ஒன்று இருப்பதாக கூறி தன்னை அழைத்ததாக கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து ஒரு பகுதியில் நினைவு பரிசுகளை விற்பனை செய்ததாகவும், அதில் வந்த பணத்தை பங்கு போடுவதில் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதால் Frat தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிவித்திருக்கிறார்.
இதேபோல் மாற்றுத்திறனாளிகளை கடத்திச் சென்று கடுமையாக தாக்கி அதனை இணையதளத்தில் பதிவேற்றி வந்திருக்கிறார். மேலும் 30க்கும் அதிகமான வழக்குகள் இவர் மீது உள்ளதாகவும், அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் தற்போது கைது செய்யப்பட்ட Fratயிடம் விசாரணை மேற்கொள்ளயிருப்பதாக தெரிவித்துள்ளனர்.