தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வில் புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 2 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
நாகை மாவட்டம், திட்டச்சேரியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2021-22ஆம் கல்வி வருடத்திற்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழு அரசு உயர்நிலைப் பள்ளிகள், ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்றார்கள். அதில் புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்ற சுபிக் ஷா, நிவேதா ஆகிய இரு மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளார்கள். தேர்ச்சி பெற்ற இரண்டு மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் வருடந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ 1000 வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு நடந்த தேர்விலும் இந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவித்த தலைமையாசிரியர், ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கி உள்ளார்கள்.