Categories
மாநில செய்திகள்

ஊரகப்பகுதிகளில் பாலங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற போது ஊரக பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்ட தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்த 114 பாலங்கள் கட்டுமான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கியிருப்பதோடு, ரூபாய் 336 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு முன்னதாக கிராம ஊரக வேலை வாய்ப்பு உள்ளிட்ட செயல்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும், நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் இந்த பாலங்கள் கட்டப்பட இருக்கின்றன. ரூபாய் 336 கோடியில் முதல் கட்டமாக தற்போது ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. மீதமுள்ள தொகை நடப்பாண்டிலேயே ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல் , ஈரோடு, கரூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த புதிய பாலம் கட்டப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாலம் கட்டும் பணியை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு பாலம் கட்டுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது..

Categories

Tech |