மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,நெல்லை, திருப்புத்தூர், தென்காசி போன்ற 9 மாவட்டங்களுக்கும் வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் மக்கள் தங்களுடைய வாக்கை அளிக்க அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
மேலும் வாக்கு பதிவானது அமைதியான முறையிலும், அச்சுறுத்தல்கள் மற்றும் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் நடப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதன் பின்னர் வாக்குச்சாவடிகளுக்கு அருகில் அமைக்கப்படும் முகாமில் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.