ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்..
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தலை நடத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.. இருப்பினும் உள்ளட்சி தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தேர்தல் ஆணையம், நாளை அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறது..
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நிர்வாகிகளுடன் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. இந்த ஆலோசனையில் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.. தற்போது நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்..
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் பிற்பகலில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்..