Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் நாளை தொடக்கம் …!!

தமிழகத்தில் 27மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் 2கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது .இதற்கான வேட்புமனுதாக்கல்நாளை நடை பெறுகிறது .

 

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார் .அதன்படி 9மாவட்டங்கள் தவிர 27மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்களுக்கே தேர்தல் நடைபெற உள்ளது .இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை நடைபெறுகிறது .கிராம ஊராட்சி தலைவர் ,கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்  இடங்களுக்கே கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ,ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கே கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும் .

 

நான்கு பதவி இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதால் நான்கு விதமான வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்படும் .15மாநகராட்சிகள் ,121நகராட்சிகள் ,528பேரூராட்சிகலுக்கே தேர்தல் அறிவிக்கப்படவில்லை நிர்வாக பணிகள் முடிந்த பின்னர் இதற்கான தேர்தல் நடத்தப்படும் என்று பழனிச்சாமி தெரிவித்தார் .

Categories

Tech |