ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ளார்..
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. செப்.27 முதல் அக்.2 வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார் சீமான்.
சீமான் பரப்புரை பயணத்திட்டம் :
செப். 27 காஞ்சிபுரம், செங்கல்பட்டு
செப். 28 ராணிப்பேட்டை, வேலூர்
செப். 29 வேலூர், திருப்பத்தூர்
செப். 30 கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
அக். 02 திருநெல்வேலி, தென்காசி