Categories
அரசியல்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. திமுகவினருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில், அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு வரும் 22ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனையடுத்து 23ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. அதன் பிறகு 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கிடையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் என அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக சார்பாக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கு 10 ஆயிரம் ரூபாயும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு 5 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பெண்கள் பாதித்தொகையை கட்டணமாக செலுத்தினால் போதும். விருப்ப மனுக்களை திமுக மாவட்ட செயலாளரிடமோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ ஒப்படைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |