தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு 4 பொறுப்பாளர்களை தேமுதிக நியமித்துள்ளது.
அதன்படி வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு துணைச் செயலாளர் பார்த்தசாரதியும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கட்சியின் அவைத் தலைவர் இளங்கோவனும், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.