Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்  6 மற்றும் 9 ஆகிய தேதிகளில்  நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது .அதன் படி முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.இதையடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்த நிலையில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தலுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத நபர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவித்தனர். மேலும் தேர்தல் நடக்கும் பகுதிகளில் வருகின்ற 9ஆம் தேதி வரை டாஸ்மாக் மது கடைகள் மற்றும் பார்கள் திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |