Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது மாவட்டங்கள் பிரிக்கப்படாததால்  9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. அந்த 9 மாவட்டங்களுக்கும் கடந்த 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. 9 மாவட்டங்களில் 145 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளும், 1,381 ஒன்றிய உறுப்பினர் பதவிகளும், 2,901 பஞ்சாயத்து தலைவர் பதவிகளும், 22681 ஊராட்சி உறுப்பினர் பதவிகளும் உள்ளது.

இந்தப் பதவிக்கான தேர்தலுடன் சேர்த்து 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 130 பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. 9 மாவட்டங்களில் 74 ஓட்டு எண்ணும் மையங்கள் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் அமைத்துள்ளார்கள். நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. பழைய முறைப்படி ஓட்டு சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. 4 பதவிக்கும் 4 வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு அச்சடித்து வழங்கப்பட்டு அதில் வாக்காளர்கள் முத்திரை குத்தி ஒரே பெட்டியில் போட்டுள்ளனர்.

ஓட்டு எண்ணுவதை கண்காணிக்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் பதிவு செய்யப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி வருகின்ற 20 ஆம் தேதி உள்ளது. வெற்றி பெற்ற அனைவரும் 20-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொள்வார்கள்.

Categories

Tech |