Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து வாக்குபதிவு அன்று பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து கூறப்பட்ட , கையேடுகள் அனைத்து அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப் இல்லையெனில் வாக்காளரை திருப்பி அனுப்பாமல், வாக்காளர் அடையாள அட்டையை சோதித்துப் பின்னர் அனுமதிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் 14 மாற்று ஆவணங்களில் ஒன்றை வைத்து வாக்களிக்க அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கையை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடயுள்ளது.

Categories

Tech |