Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை…!!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தலை நடத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இருப்பினும் உள்ளட்சி தேர்தலுக்கான பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்ட திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.

Categories

Tech |