தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இவற்றிற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து 5-வது நாள் மட்டும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 24,607 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 6,864 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,298 வேட்பு மனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 202 வேட்பு மனுக்களும் என்று மொத்தம் 33,971 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மட்டும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 41,027 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10,107 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,683 வேட்பு மனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 228 வேட்பு மனுக்களும் என 54,045 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.