Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. 11 வித ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்….!!!!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை ஆகியவை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கான அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்கலாம்.

இதையடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சாவடி சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 வித ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் கார்டு, நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓய்வூதிய ஆவணங்கள், எம்பி எம்எல்ஏ அலுவலக அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |